Naan Ini Kaatril Song Lyrics Yaakkai

Published by
Naan Ini Kaatril Song Lyrics #Yaakkai
#Yuvan #Chinmayi

Naan ini kaatril
nadakka pogiren
koodave un kaigal
korthu kolgiren

indha prabanjam thaandiye
oru payanam pogalaam
adhil moochu kooda
thaevayillai mutham ondril
serndhu sellalaam

midhandhu midhandhu
vandhaai
nenjil nadandhu nadandhu
sendraai
asandhu asandhu nindre
ayyo melindhu valaindhu
kondraai

un poarvai iruttile
naan tholaindhu pogiren
oru jaadai seiyyadaa
un paadha chuvattil
thoosi pola padigiren
madigiren.

melliya saaralum
manjalaai veyyilum
sernthadhu pol

unthan vetkamum
kobamum sernthadhadi
theththupal keeralum
konjaladi

kadhalum illaatha
kaamamum illatha
oar nodi

oar nodi
paar suttri paar
nammai pol ini
yaaradaa kadhalipaar

nee enthan puthagam
mellisai pola ne
yaavilum neeye

kattilum nee
koyilum nee
thaai madi aaagidum
tholviyum naanthaane
Bharathi polaanen
paithiyam polaane
unnal thaane.

midhandhu midhandhu
vandhaai
nenjil nadandhu nadandhu
sendraai
asandhu asandhu nindre
ayyo melindhu valaindhu
kondraai

un poarvai iruttile
naan tholaindhu pogiren
oru jaadai seiyyadaa
un paadha chuvattil
thoosi pola padigiren
madigiren.

andhi mazhaiyil
pachai thalirgal
nanaitha vaasam
undha udalil
sila pagudhi
adhile veesum

endhan irudhi
moochu mudindhu
kangal moodum
tharuname
unadhu uruvam
kaattume
unnoda ninaivu naan

kaatril midhakkum
isaipol undhan kaadhil
nulaindhu kolven.

kaatil kidakum ilaipol
enthan koonthal
kalaithu selvaai

indha boomi podhumaa
innum veru vendumaa
nee paartha paarvaigal
adhu kaala veliyil
kaatru pola kalakkume
midhakkume.

நான் இனி காற்றில் - யாக்கை Lyrics in Tamil

நான் இனி காற்றில்
நடக்க போகிறேன்
கூடவே உன் கைகள்
கோர்த்து கொள்கிறேன்

இந்த பிரபஞ்சம் தாண்டியே 
ஒரு பயணம் போகலாம் 
அதில் மூச்சு கூட தேவையில்லை 
முத்தம் ஒன்றில் 
சேர்ந்து செல்லலாம்

மிதந்து மிதந்து வந்தாய் 
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய் 
அசைந்து அசைந்து நின்றே 
ஐயோ மெலிந்து 
வளைந்து கொன்றாய்

உன் போர்வை இருட்டிலே 
நான் தொலைந்து போகிறேன் 
ஒரு ஜாடை செய்யடா 
உன் பாத சுவற்றில் 
தூசி போல படிகிறேன் மடிகிறேன்.

மெல்லிய சாரலும் 
மஞ்சளாய் வெய்யிலும் 
சேர்ந்தது போல் 
உந்தன் வெட்கமும் 
கோபமும் சேர்ந்ததடி 
தெத்துப்பல் கீறலும் கொஞ்சலடி

காதலும் இல்லாத 
காமமும் இல்லாத 
ஓர் நொடி ஓர் நொடி 
பார் சுற்றி பார் 
நம்மை போல் 
இனி யாரடா காதலிப்பார்

நீ எந்தன் புத்தகம் 
மெல்லிசை போல 
நீ யாவிலும் நீயே

கட்டிலும் நீ 
கோயிலும் நீ 
தாய் மடி ஆகிடும் 
தோல்வியும் நான்தானே 
பாரதி போலானேன் 
பைத்தியம் போலானேன் 
உன்னால் தானே.

மிதந்து மிதந்து வந்தாய் 
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய் 
அசைந்து அசைந்து நின்றே 
ஐயோ மெலிந்து 
வளைந்து கொன்றாய்

உன் போர்வை இருட்டிலே 
நான் தொலைந்து போகிறேன் 
ஒரு ஜாடை செய்யடா 
உன் பாத சுவற்றில் 
தூசி போல படிகிறேன் மடிகிறேன்.

அந்தி மழையில் 
பச்சை தளிர்கள் 
நனைத்த வாசம் 
உந்த உடலில் 
சில பகுதி 
அதிலே வீசும்

எந்தன் இறுதி மூச்சு 
முடிந்து கண்கள் மூடும் 
தருணமே உனது உருவம் 
காட்டுமே உன்னோட 
நினைவு நான்

காற்றில் மிதக்கும் இசைபோல் 
உந்தன் காதில் 
நுழைந்து கொள்வேன்.

காட்டில் கிடைக்கும் இலைபோல் 
எந்தன் கூந்தல் 
கலைத்து செல்வாய்

இந்த பூமி போதுமா 
இன்னும் வேறு வேண்டுமா 
நீ பார்த்த பார்வைகள் 
அது கால வெளியில் 
காற்று போல கலக்கும் 
மிதக்கும்.