Manmathane Lyrics Manmathan

Published by
Manmathane nee kalaignan thaan

Manmathane nee kavignan thaan
Manmathane nee kadhalan thaan
Manmathane nee kavalan thaan
ennai unakkulle tholaithaen
yeno theriyala
unnai kanda nodi yeno 
innum nagarala. 
undhan rasigai naanum
unakken puriyavillai.
eththanai aangalai
kadanthu vandhen
evanaiyum pudikkavillai.
irubathu varudam
unaipol evanum 
ennai mayakkavillai. (2)
Manmathane nee kalaignan thaan

Manmathane nee kavignan thaan
Manmathane nee kadhalan thaan
Manmathane nee kavalan thaan
naanum or pennena
pirandha palanai 
indrethaan nadanthaen.
unnai naan paartha pin
aangal vargathai naanum
mathiththaen.
endhan nenjil oonjal katti
aadikonde irukkiraai
enakkul pugunthu
engo neeyum
oadi konde irukkiraai
azhagaai naanum maarugiren
arivaai naanum pesugiren
sugamaai naanum malarugiren
unakkethum therigirathaa.
orumurai paarthaal
palamurai inikkiraai
enna visithiramo.
nanbane enakku kadhalan
aanaal adhuthaan 
sarithiramo.  (2)
Manmathane unnai paarkiren
Manmathane unnai rasikkiren.
Manmathane unnai rusikkiren
Manmathane unnai vasikkiren.
unnai muzhuthaaga
naanum mendu
milungavo.
undhan munnaadi
mattum vetkam
varattumo.
endhan padukkaraikku
undhan peyarai vaikavo.
adimai saasanam ezhuthi
tharugiren ennai yetrukollu.
aayul varaiyil unnudan
iruppen anbaai paarthukollu.(2)

மன்மதனே - மன்மதன் Lyrics in Tamil

மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்

என்னை உனக்குள்ளே தொலைத்தேன் 
ஏனோ தெரியல 
உன்னை கண்ட நொடி ஏனோ 
இன்னும் நகரல. 
உந்தன் ரசிகை நானும் 
உனக்கேன் புரியவில்லை.

எத்தனை ஆண்களை 
கடந்து வந்தேன்
எவனையும் புடிக்கவில்லை.
இருபது வருடம் 
உன்னைப்போல் எவனும் 
என்னை மயக்கவில்லை. (2)

மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்

நானும் ஓர் பெண்ணென 
பிறந்த பலனை 
இன்றேதான்  அடைந்தேன்.

உன்னை நான் பார்த்த பின் 
ஆண்கள் வர்கத்தை
நானும் மதித்தான்.

எந்தன் நெஞ்சில் 
ஊஞ்சல் கட்டி 
ஆடிக்கொண்டே இருக்கிறாய் 
எனக்குள் புகுந்து 
எங்கோ நீயும் 
ஓடி கொண்டே இருக்கிறாய்

அழகாய் நானும் மாறுகிறேன் 
அறிவாய் நானும் பேசுகிறேன் 
சுகமாய் நானும் மலருகிறேன் 
உனக்கேதும் தெரிகிறதா.

ஒருமுறை பார்த்தால் 
பலமுறை இனிக்கிறாய் 
என்ன விசித்திரமோ.

நண்பனே எனக்கு 
காதலன் ஆனால் 
அதுதான் சரித்திரமோ. (2)

மன்மதனே உன்னை பார்க்கிறேன் 
மன்மதனே உன்னை ரசிக்கிறேன். 
மன்மதனே உன்னை ருசிக்கிறேன் 
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்.

உன்னை முழுதாக நானும் 
மெண்டு  மிழுங்கவோ . 
உந்தன் முன்னாடி மட்டும் 
வெட்கம்  வரட்டுமோ .
எந்தன் படுக்கரைக்கு 
உந்தன் பெயரை வைக்கவோ.

அடிமை சாசனம் 
எழுதித்  தருகிறேன் 
என்னை ஏற்றுக்கொள்ளு. 

ஆயுள் வரையில் 
உன்னுடன் இருப்பேன் 
அன்பாய் பார்த்துக்கொள்ளு